“முன்னாடி தோனி, இப்போ விராட்கோலி” இந்தியன் டீம்ல வேற யாரையுமே வளரவே விடமாடீங்களா?? – கம்பீர் காட்டம்

இந்திய அணியில் நிலவி வரும் ஹீரோ கலாச்சாரத்தை விட்டோழியுங்கள் என்று தனது சமீபத்திய பேட்டியில் கடுமையாக பேசியுள்ளார் கௌதம் கம்பீர்.

இந்திய அணியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வீரர்கள் சிறந்து விளங்குவார்கள். அவர்களை போற்றி புகழ்வது வழக்கம். கபில் தேவ் காலத்தில் துவங்கி சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, தற்போது விராட் கோலி வரை என குறிப்பிட்ட வீரர்களை மக்கள் உச்சத்தில் வைத்து கடவுளாகவும் ஹீரோவாகவும் பார்ப்பது வழக்கம்.

இப்படி அணிக்குள் நிலவி வரும் ஹீரோ கலாச்சாரத்தை விட்டொழியுங்கள். அதை ட்ரெஸ்ஸிங் ரூம் வரை கொண்டு வராதீர்கள். ஏனெனில் இதன் காரணமாக அந்த இடத்திற்கு வரும் மற்ற வீரர்கள் வளர முடியாமல் போகிறது என கடுமையாக விமர்சித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

 

“இதுபோன்று குறிப்பிட ஒரு வீரரை ஹீரோவாக பார்ப்பதால், மற்ற இளம் வீரர்கள் அந்த இடத்தில் வளர முடியும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் இவர்களது நிழலில் அவர்கள் வளர முடியாது. மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி இவர்களின் நிழலில் மற்ற வீரர்களால் மேலே வர முடிந்ததா? இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?.” என தனது பேட்டியில் கடுமையான கேள்விகளை முன் வைத்தார். “இனியும் இது போன்ற மான்ஸ்டர்களை வளர்ப்பதில் முனைப்பு காட்டாதீர்கள். ஒவ்வொரு வீரரும் இந்திய அணிக்கு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஆசிய கோப்பை தொடரில் விராட்கொலி 100 ரன்கள் அடித்தது வரவேற்கத்தக்கது. அதே நேரம் அப்போட்டியில் புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த இரண்டில் விராட் கோலி ரசிகர்கள் அனைவராலும் புகழ்ந்து தள்ளப்பட்டார். உலகெங்கிலும் உள்ள பலரும் அவரை பாராட்டி பதிவிட்டு வந்தனர். ஆனால் இந்த பாராட்டுக்கு மத்தியில் புவனேஸ்வர் குமார் மறைந்து போய்விட்டார். அவரது 5 விக்கெட்டும் மிகவும் முக்கியம். ஏன் அதைப் பற்றி ஒருவர் கூட பேசவில்லை?. இதைத்தான் நான் கூறுகிறேன், விராட் கோலியின் நிழலில் மற்ற வீரர்கள் வளர முடியவில்லை என்று. அது இந்திய அணிக்கு ஆரோக்கியத்தை தருமா? என்றால் கேள்விக்குறிதான்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.