இப்போ எங்களை அடிங்கடா பாக்கலாம்.. தரமான 11 வீரர்களுடன் இறங்கும் ஆர்சிபி.. முதலில் பேட்டிங்!

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆர்சிபி அணி வீரர்களின் பிளேயிங் லெவனை இங்கே பார்ப்போம்.

ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல். முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார். இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சேசிங் செய்த அணி வெற்றி பெற்றதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக ராகுல் கூறினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு தோல்வி மற்றும் ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் சொந்த மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் இருக்கிறது.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. இரண்டுமே சொந்த மைதானத்தில் பெற்ற வெற்றியாகும். இன்றைய போட்டி வெளி மைதானத்தில் நடப்பதால் ஆர்சிபி அணிக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

இரண்டு அணிகளிலும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன மற்றும் யார்யார் உள்ளே? யார்யார் வெளியே? என்பதைப்பற்றியும் பின்வருமாறு காண்போம்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்:

கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஜெய்தேவ் உனட்கட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

Mohamed:

This website uses cookies.