குஜராத் அணிக்கு அறிமுகமாகிறார் முன்னாள் சிஎஸ்கே வீரர்… பஞ்சாப் அணி பேட்டிங்… இரு அணிகளிலும் என்னென்ன மாற்றங்கள்? – முழு விபரம் உள்ளே!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பவுலிங் செய்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது? என்பதை பின்வருமாறு காண்போம்.

மொகாலி மைதானத்தில் நடைபெறும் இந்த வருட ஐபிஎல் சீசனின் 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளும் தலா மூன்று போட்டிகள் விளையாடி இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளன. மேலும் இரண்டு அணிகளும் தோல்வியை சந்தித்த பிறகு, இந்த லீக் போட்டியில் மோதுகின்றன என்பதால் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்குவார்கள்.

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ரபாடா மற்றும் பனுகா ராஜபக்சா இருவரும் பிளேயிங் லெவனுக்குள் வந்திருக்கின்றனர். குஜராத் அணியை பொறுத்தவரை, இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் குறித்து முழு விவரங்களை பின்வருமாறு காண்போம்.

பஞ்சாப் கிங்ஸ்:

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(கேப்டன்), மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா(கீப்பர்), சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமான் சாஹா(கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்.

 

Mohamed:

This website uses cookies.