கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளிடையே நடக்கும் போட்டியில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
ஐபிஎல்-இன் 19ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நித்திஷ் ரானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் செய்யாமல் களமிறங்குவதாகவும் அறிவித்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொருத்தவரை, தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வெளியில் அமர்த்தப்பட்டு அபிஷேக் சர்மா உள்ளே எடுத்து வரப்பட்டு இருக்கிறார். இந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது.
இரு அணிகளும் கடைசியாக விளையாடிய லீக் போட்டிகளில் வெற்றி பெற்று பலத்துடன் வந்திருக்கிறது. ஆகையால் அந்த வெற்றியை தொடர இரண்டு அணிகளின் பக்கமும் போராட்டம் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கொல்கத்தா அணியை பொறுத்தவரை, சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. ஆகையால் சற்று கூடுதல் பலத்துடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் விவரம் பின்வருமாறு காண்போம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென்(கீப்பர்), மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ரஹ்மானுல்லா குர்பாஸ்(கீப்பர்), என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், சுயாஷ் சர்மா, லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி.
இம்பாக்ட் வீரர்கள் பட்டியல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சப்ஸ்:
அப்துல் சமத், விவ்ராந்த் சர்மா, க்ளென் பிலிப்ஸ், மயங்க் டாகர், வாஷிங்டன் சுந்தர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சப்ஸ்:
மன்தீப் சிங், அனுகுல் ராய், வெங்கடேஷ் ஐயர், டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா