டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி(ஆர்சிபி).
ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் போட்டியில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தார்.
இரு அணிகளின் வெற்றி தோல்வி அலசல்
ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் விளையாடும் பலத்தை கொண்டிருந்தாலும் கடந்த லீக் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கடைசி பந்துவரை ஆட்டம் சென்று ஆர்சிபி அணிக்கு தோல்வியில் முடிந்துவிட்டது. இதுவரை விளையாடிய மூன்று லீக் போட்டிகளில் இரண்டு தோல்வி மற்றும் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை. விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவி ஐந்தாவது போட்டியில் விளையாட பெங்களூருவிற்கு வந்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பலம்மிக்க ஆர்சிபி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும் இருக்கிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவனை பின்வருமாறு காண்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், அபிஷேக் போரல் (கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்