பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை கீழே காண்போம்.
ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ஷாம் கர்ரன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கேப்டன் ஷிகர் தவான் உடல் அளவில் சில அசவுகரியங்களை உணர்வதால் இன்றைய போட்டியில் ஓய்வில் இருக்கிறார்.
இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை…
லக்னா சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியைப் பொறுத்தவரை, ஏற்கனவே நான்கு லீக் போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் சொந்த மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, நான்களில் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியை பெற்றது. பின்னர் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி சற்று பின்தங்கியுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை தவிர்ப்பதற்கு இப்போட்டியில் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
அணியில் என்னென்ன மாற்றங்கள்
பஞ்சாப் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் கேப்டன் ஷிகர் தவான் இல்லாமல் விளையாடுகிறது. மொத்தமாக 3 மாற்றங்களை செய்து இப்போட்டியில் களமிறங்குகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பட்டியலை பின்வருமாறு காண்போம்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
அதர்வா டைடே, மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, சிக்கந்தர் ராசா, சாம் குர்ரன்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி:
கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஆயுஷ் படோனி, அவேஷ் கான், யுத்விர் சிங் சரக், மார்க் வூட், ரவி பிஷ்னோய்