புது ட்விஸ்ட்டா இருக்கே… மும்பை அணிக்கு கேப்டனாகிறார் சூரியாகுமார் யாதவ்.. அர்ஜுன் டெண்டுகர் அறிமுகம்.. மும்பை அணி பேட்டிங்.. ரோகித் சர்மா இடத்திற்கு யார் வந்திருக்கிறார்? – விபரம் உள்ளே!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. சூரியகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை கீழே காண்போம்.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில்  நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

ரோகித் சர்மாவிற்கு வயிற்றுப் பகுதியில் பிரச்சனை இருப்பதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. ஆகையால் தற்காலிக கேப்டனாக சூரியகுமார் யாதவ் பொறுப்பேற்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை, ரோகித் சர்மா இல்லாமல் கூடுதலாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பதில் கவனிக்கக்கூடிய ஒன்றாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்று அறிமுகம் ஆகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை, கடந்த லீக் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும், பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் செய்யாமல் நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

கொல்கத்தா அணி கடைசியாக நடந்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியுற்றபிறகு இங்கு வந்திருக்கிறது. அதுவும் மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது என்பதால் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்திவிட்டு இப்போட்டிக்கு வந்திருக்கிறது. இன்றைய போட்டி மும்பை மைதானத்தில் நடைபெறுவதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலமாகவும் இருக்கிறது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ரஹ்மானுல்லா குர்பாஸ்(கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி

மும்பை இந்தியன்ஸ்:

இஷான் கிஷன்(கீப்பர்), கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), டிம் டேவிட், நேஹால் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ரித்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்

Mohamed:

This website uses cookies.