ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதும் போட்டியில் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்.
ஜெய்ப்பூரில் நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பவுலிங் செய்வதாக முடிவு செய்துள்ளார்.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆடம் ஜாம்பா வெளியில் அமர்த்தப்பட்டு ஜேசன் ஹோல்டர் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார். லக்னோ அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த நவீன் உல்-ஹக் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார்.
லக்னோ அணி கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவிய பிறகு இன்றைய போட்டிக்கு வந்திருக்கிறது. அதேநேரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த போட்டியில் பலம்மிக்க குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியபிறகு இன்றைய போட்டிக்கு வந்திருக்கிறது.
மேலும் நான்கு வருடங்களுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. இது அவர்களது சொந்த மைதானம் என்பதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.
இப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் பிளேயிங் லெவன் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்):
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மயர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்):
கே.எல். ராகுல் (கேப்டன், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், ரவி பிஷ்னோய்