சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பவுலிங் சிஎஸ்கே அணி. இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? என்பதை பின்வருமாறு காண்போம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நீ போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே பிளேயிங் லெவலுடன் களமிறங்குகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் ஆர்சிபி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி மீண்டும் சேப்பாக்கம் வந்திருக்கிறது. சொந்த மைதானத்தில் விளையாடும் பலத்துடனும் சிஎஸ்கே அணி இருக்கிறது. அதேநேரம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஹைதராபாத் மைதானத்தில் தோல்வியை தழுவி இன்றைய போட்டிக்கு வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? பிளேயிங் லெவனில் யார் யார் என்பதை பின்வருமாறு காண்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்):
ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(கீப்பர்), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா.
சிஎஸ்கே மாற்று வீரர்கள்:
அம்பதி ராயுடு, ஷேக் ரஷீத், எஸ் சேனாபதி, டுவைன் பிரிட்டோரியஸ், ஆர் ஹங்கர்கேகர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாற்று வீரர்கள்:
டி நடராஜன், விவ்ராந்த் சர்மா, க்ளென் பிலிப்ஸ், மயங்க் டாகர், சன்விர் சிங்