கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இம்முறையும் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டன் பொறுப்பு வகிக்கிறார்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியிலும் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்து களமிறங்குகிறார்.
ஆர்சிபி அணியை பொறுத்தவரை, கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பெற்று இன்றைய போட்டிக்கு வந்திருக்கிறது. மேலும் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது என்பதால் வெற்றி வாய்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது.
அதேநேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த பிறகு இந்த மைதானத்திற்கு வந்திருக்கிறது. தொடர் தோல்விகளை தவிர்க்கும் விதமாக இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற முனைப்பிலும் இருக்கிறது. மேலும் இன்றைய போட்டியிலும் தோல்வியை தழுவினால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதில் கூடுதல் சிக்கல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகள் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறது
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரண்டு அணிகளில் விவரங்கள் பின்வருமாறு காணலாம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்):
என் ஜெகதீசன்(கீப்பர்), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டேவிட் வைஸ், வைபவ் அரோரா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்):
விராட் கோலி(கேப்டன்), ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, விஜய்குமார் வைஷாக், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்