அதே பிளேயிங் லெவனோட வரோம், முடிஞ்சா அடிங்க… சிஎஸ்கே முதலில் பேட்டிங்… பஞ்சாப் அணியில் ஒரு முக்கிய மாற்றம்! – விபரம் உள்ளே!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சிஎஸ்கே அணி இந்த போட்டியிலும் அதே பிளேயிங் லெவனுடன் இறங்குகிறது. பஞ்சாப் அணியில் என்னென்ன மாற்றங்கள் என்பதை கீழே பார்ப்போம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் ஒன்பதாவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கேப்டன் மகேந்திர சிங் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்குவதாக முடிவை அறிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம்போல இந்த போட்டியிலும் பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் செய்யாமல் களமிறங்குகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு மாற்றம் செய்திருக்கிறது. ஹர்பிரித் சிங் லெவனுக்குள் வந்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகள் சந்தித்து இருக்கிறது. 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டு போட்டிகளில் நான்கு வெற்றிகள் மற்றும் நான்கு தோல்விகள் சந்தித்துள்ளது. 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

இரு அணிகளும் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு இப்போட்டிக்கு வந்திருக்கின்றன. மீண்டும் வெற்றி முகத்திற்கு திரும்ப இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் அவசியமாக இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணவும் அவசியமாக இருக்கிறது.

இரு அணிகளின் பிளேயிங் லெவல் விவரங்களை பின்வருமாறு காண்போம்

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

அதர்வா டைடே, ஷிகர் தவான்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராசா, சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா(கீப்பர்), ஷாருக் கான், ஹர்பிரீத் சிங் பாட்டியா, ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா

Mohamed:

This website uses cookies.