இப்போ எங்களை தொட்டு பாருங்கடா… பவுலிங்கில் பலமான ஆளை இறக்கும் ஆர்சிபி…முதலில் பேட்டிங் செய்கிறது! – இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? விபரம் உள்ளே!

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது ஆர்சிபி அணி. பாப் டு பிளசிஸ் மீண்டும் கேப்டன் பொறுப்பிற்கு வந்துள்ளார். இரு அணிகளின் பிளேயிங் லெவனில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை பின்வருமாறு காணலாம்.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ஆர்சிபி அணி இந்த போட்டியில் இரண்டு புதிய மாற்றங்களுடன் களமிறங்குகிறது.காயம் காரணமாக வெளியில் இருந்த ஹேசல்வுட் மீண்டும் பிளேயிங் லெவனுக்கு வந்திருக்கிறார். பேட்டிங்கில் மற்றுமொரு மாற்றத்தை ஆர்சிபி அணி செய்திருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பந்துவீச்சில் ஒரு மாற்றம் செய்து களமிறங்கியுள்ளது. ஆவேஷ் கான் வெளியில் அமர்த்தப்பட்டு கிருஷ்ணப்பா கௌதம் உள்ளே வந்திருக்கிறார்.

புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை லக்னோ 8 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மற்றும் மூன்று தோல்விகள் சந்தித்துள்ளது. 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 8 போட்டிகளில் நான்கு வெற்றிகள் மற்றும் நான்கு தோல்விகளை சந்தித்து, 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

இன்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால், 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை அடைய வாய்ப்புகள் உள்ளது. ஆர்சிபி அணி வெற்றி பெற்றால், 10 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நெட் ரன்ரேட் அடிப்படையில் மாற்றங்களை காணலாம்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரண்டு அணிகளின் விவரங்களை கீழே காணலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்):

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, கர்ண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசல்வுட்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்):

கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர்

 

Mohamed:

This website uses cookies.