அண்ணன்-தம்பி மோதிக்கொள்ளும் சுவாரஷ்யம்.. குஜராத் அணி பேட்டிங்.. கேஎல் ராகுலுக்கு பதில் யார்? – இரு அணிகளின் பிளேயிங் லெவன் உள்ளே!

அண்ணன்-தம்பி மோதிக் கொள்ளும் சுவாரசியமான போட்டியில் லக்னோ அணி முதலில் பவுலிங் செய்கிறது. இரண்டு அணிகளின் குறித்த விவரங்களை பின்வருமாறு காண்போம்.

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் தம்பி ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், அண்ணன் க்ருனால் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோதும் சுவாரஸ்யம் நிகழ்கிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்?

குஜராத் டைட்டன்ஸ் அணியை பொருத்தவரை, ஜோஸ்வா லிட்டில் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு சென்றுள்ளதால் அல்சாரி ஜோசப் பிளேயிங் லெவனுக்குள் வந்திருக்கிறார். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை பொறுத்தவரை சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. நவீன் உல ஹக் வெளியில் அமர்த்தப்பட்டு குயின்டன் டி காக் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார்.

புள்ளி பட்டியல் விவரங்கள்

புள்ளி பட்டியலை பொருத்தவரை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 10 போட்டிகளில் 11 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் வலுவாக இருக்கிறது.

இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும். லக்னோ அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன.

இரண்டு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்களை பின்வருமாறு காணலாம்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்):

குயின்டன் டி காக்(கீப்பர்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா(கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஸ்வப்னில் சிங், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், அவேஷ் கான்

குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):

விருத்திமான் சாஹா(கீப்பர்), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி

Mohamed:

This website uses cookies.