சொந்த கோட்டையில் ஆடும் சிஎஸ்கே.. முதலில் பேட்டிங் செய்கிறது.. அணியில் என்னென்ன மாற்றங்கள்?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அணியில் என்னென்ன மாற்றம் என்பதை கீழே பார்ப்போம்.

16ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆறாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தனது முதல் போட்டியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி, 50 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று கையோடு இரண்டாவது போட்டிக்கு வந்திருக்கிறது. அதேநேரம் சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. ஆனாலும் சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த ரசிகர்கள் மத்தியில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் இருக்கிறது.

இன்றைய போட்டியில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு மாற்றத்துடன் லக்னோ அணி இன்றைய போட்டிக்கு களமிறங்குகிறது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் பிளேயிங் லெவன்:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), கிருஷ்ணப்பா கவுதம், மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் மற்றும் கீப்பர்), சிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர்

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக முறை வென்றிருக்கிறது. அதேநேரம் சிஎஸ்கே அணி இந்த மைதானத்தில் 71% வெற்றிகளை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.