கொல்கத்தா மைதானத்தில் முதலில் பவுலிங் செய்கிறது ஆர்சிபி அணி. இரு அணிகளும் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளது என்பதை கடைசியில் காண்போம்.
2023 ஐபிஎல் சீசனின் ஒன்பதாவது லீக் போட்டி கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் பலர் மைதானத்தில் குவிந்துள்ளனர்.
இப்போட்டியில்உள்ளூர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
முதல் போட்டியில் பலம்மிக்க மும்பை அணியை வீழ்த்தி இரண்டாவது போட்டிக்கு நல்ல ஃபார்மில் வந்துள்ளது ஆர்சிபி அணி. அதேநேரம் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியை தழுவி வந்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இருப்பினும் சொந்த மைதானம் என்பதால் கூடுதல் பலத்துடன் இருக்கிறது.
ஆர்சிபி அணியை பொறுத்தவரை இன்றைய பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்திருக்கிறது. முதல் லீக் போட்டியில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் பாதியில் வெளியேறிய ரீஸ் டாப்லீ அவருக்கு பதிலாக டேவிட் வில்லே உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார். கொல்கத்தா அணியும் இப்போட்டியில் ஒரு மாற்றம் செய்திருக்கிறது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் பிளே 11 பார்ப்போம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் (ஆர்சிபி):
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ண் சர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்:
மன்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ்(கீப்பர்), நிதிஷ் ராணா(கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி