கங்குலி போடும் பலே பிளான்: புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலியா! அப்படி என்ன திட்டம் தீட்டுகிறார்?

கங்குலி போடும் பலே பிளான்: புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலியா! அப்படி என்ன திட்டம் தீட்டுகிறார்?!

கங்குலியின் புதிய திட்டத்திற்கு, “மாறுபட்ட சிந்தனை” என புகழாரம் சூட்டியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

இந்திய கிரிக்கெட் கவுன்சில் போர்டின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் எடுத்து வரும் பல முயற்சிகள் பெரிதும் வரவேற்பை பெற்றுவருகின்றன.

இவரது முயற்சியால் இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் கோலாகலமாக நடத்தப்பட்டது. அடுத்ததாக, ராகுல் டிராவிட் உடன் இணைந்து உள்ளூர் போட்டிகளில் இன்னும் சில மாற்றங்களை கொண்டுவரவும் திட்டமிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் ‘சூப்பர் சீரிஸ்’ என்ற கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறார். இது தொடர்பாக உரிய நாடுகளிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது பிசிசிஐ தரப்பு.

ஆஸ்திரேலியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு, இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்,

“பி.சி.சி.ஐ., தலைவராக பதவியேற்ற குறுகிய காலத்தில், இந்திய மண்ணில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி காட்டினார் கங்குலி. தற்போது நான்கு நாடுகளுக்கு இடையிலான ‘சூப்பர் சீரிஸ்’ தொடரை நடத்த திட்டமிட்டுள்ளார். இது, இவரது புதுமையான சிந்தனைக்கு சிறந்த உதாரணம். மாறுபட்ட சிந்தனை கொண்டவர் கங்குலி.” என்றார்.

மேலும், சூப்பர் சீரிஸ் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் சூப்பர் சீரிஸ் தொடர் துவங்க இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

எது எப்படியோ? இந்த சூப்பர் சீரிஸ் மூலமாக ரசிகர்களில் செம்ம கிரிக்கெட் ட்ரீட் காத்திருக்கிறது என்பது உறுதி.

Prabhu Soundar:

This website uses cookies.