விதிமுறை மீறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கப்படுமா? கங்குலி சொன்ன அதிர்ச்சி தகவல்!

விதிமுறை மீறிய சென்னை அணி நீக்கப்படுமா? கங்குலி சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஐபிஎல் தொடர் துவங்கும் முன்னர் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட விதிமுறையை மீறியதற்காக சென்னை அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என தெரிவித்திருக்கிறார் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.

இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தள்ளிச் சென்றது. அதன் பின்னர் முன்னதாகவே நடத்தி முடிப்பதற்காக செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் 10ஆம் தேதியில் முடிவடைய இருக்கிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் தொடருக்கு ஒரு மாதம் முன்னரே வீரர்கள் துபாய் வந்தடைந்து, தனிமைப்படுத்தி ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.

அதன் பிறகு இரண்டாம் கட்டமாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் உட்பட அதிகாரிகள், பயிற்சியாளர்கள் என பதிமூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது.

இந்த சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் துபாய் ஏர்போர்ட் வந்தடைந்தபோது அணியின் மேலாளர் ரசல் ராதாகிருஷ்ணனை கட்டிப்பிடித்தபடி வெளியே சென்றனர். இந்த வீடியோவை கண்ட பலர் பிசிசிஐ மீது கடும் விமர்சனத்தையும் கேள்விகளையும் முன்வைத்து விதிமுறை மீறியதற்காக கடுமையாக சாடினர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லை ஐபிஎல் தொடரில் மாற்றம் நிகழுமா? என்பது குறித்து சவுரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை குறித்து என்னால் எவ்வித பதிலும் அளிக்க இயலாது. விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். இந்த வருடம் ஐபிஎல் தொடர் வெளியிடப்படும் அட்டவணைப்படி சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிதாக்க முயற்சிக்கின்றன. சரியான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படியே வீரர்களுக்கு பரிசோதனையும் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.” என பதிலளித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.