விராட் கோலியின் பேட்டிங் இளமைக்காலத்திலேயே மாற்றியது இவர்தான்! வெளிவந்த உண்மை தகவல்!
விராட் கோலி இப்போது உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். டெஸ்ட் , டி20, ஒருநாள் என அனைத்துவிதமான போட்டிகளிலும் பட்டையை கிளப்பி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இடத்தையும் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் இவர். ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்தவர்.
அதன் பின்னர் நேரடியாக ஐபிஎல் தொடரின் மூலம் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி அவரை எடுத்துக் கொண்டது. ஆரம்பகாலத்தில் அந்த அணியில் இவர் சரியாக விளையாடவில்லை போலிருக்கிறது. பெரிதாக திறமையும் இல்லை என்று அனைவரும் யோசித்துக்கொண்டு இருந்திருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தனது உண்மைகளைக் கூறியுள்ளார்.
கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக இருக்கும் போதுதான் விராட் கோலி இந்திய அணிக்காக அறிமுகமாநார். இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடும் போது அவரை நான் பார்த்தேன். அப்போது உனக்கு இந்திய அணியில் நீண்ட நாளைக்கு வேலை இருக்கிறது. ஆனால் உன்னை நீ கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான முறையில் உன்னை நீயே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உனக்கு நிறைய திறமை இருக்கிறது.
இளமையாகவும் இருக்கிறாய். ஆனால் உன்னுடைய மிகச்சிறந்த திறமைகள் வெளிவரும் அளவிற்கு நீ உழைப்பதில்லை. இதன் காரணமாக அவருடன் நான் அதிகம் பேசினேன். அதன்பின்னர் தான் ஒருத்தர தாண்டவம் ஆடத் தொடங்கினார் என்று தெரிவித்துள்ளார் கேரி கிர்ஸ்டன்.
இவரது தலைமையில்தான் இந்திய அணி முதன் முதலில் உலக கோப்பை தொடரை தோனியின் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது. இவர்தான் அப்போது பயிற்சியாளராக இருந்தார். மூன்று வருடங்கள் இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இரண்டு வருடங்கள் பயிற்சியாளராகவும் அவர்தான் இருந்தார்.