அயர்லாந்து கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனான கேரி வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனான கேரி வில்சன் நியமினம்
அயர்லாந்து கிரிக்கெட் வீரர் வில்லியம் போர்டர்பீல்ட் அனைத்து வகை போட்டிகளுக்கும் கேப்டனாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக போர்டர்பீல்ட் சமீபத்தில் அறிவித்தார்.
“கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து விதமான போட்டிகளுக்கும் எனது நாட்டிற்கு கேப்டனாக இருப்பது ஒரு பெரிய கௌரவமாகும். கடந்த ஐந்து உலக ட்வென்டி 20 உலகக் கோப்பையிலும் அயர்லாந்துக்கு கேப்டனாக இருந்ததால் நான் அதிர்ஷ்டம் அடைந்துள்ளேன்” என்று போர்டர்பீல்ட் கூறினார்.
“தகுதிகள் ஒரு வருடம் அல்லது அதற்கு முன்னரே, இந்த டெஸ்ட் வடிவத்தில் ஒரு புதிய வித்யாசத்தை கொடுக்க எனக்கு சரியான நேரம் என்று நினைக்கிறேன்.
“நான் விளையாடுவதை விரும்பும் ஒரே ஒரு வடிவத்தில் மட்டும் எனது பேட்டிங்கில் கவனம் செலுத்துகிறேன், கடந்த 10 ஆண்டுகளில் எனக்கு ஆதரவைப் பெற உழைத்ட்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன், உண்மையில் இந்த முடிவை நான் தான் எடுக்கிறேன்.” எனக் கொஓறினார் போர்ட்டர்பீல்ட்
இதையடுத்து அயர்லாந்து டி20 அணியின் புதிய கேப்டனாக கேரி வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை 53 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2017-18 காலகட்டத்தில் கேரி வில்சன் டி20 போட்டிகளில் சராசரியாக 51.20 சராசரியில் 295 ரன்கள் எடுத்துள்ளார்
ஜூன் 12-ம் தேதி தொடங்க உள்ள அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து இடையேயான முத்தரப்பு டி20 தொடரில் இருந்து கேரி வில்சன் கேப்டனாக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு டி20 தொடருக்கான அயர்லாந்து அணி: கேரி வில்சன் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, பீட்டர் சேஸ், ஜார்ஜ் டாக்ரெல், பேரி மெக்கர்த்தி, கெவின் ஓ பிரையன், வில்லியம் போர்டர்பீல்ட், ஸ்டூவர்ட் போயன்டர், பாய்ட் ரான்கின், ஜேம்ஸ் ஷனோன், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்ப்சன், கிரெய்க் யங்.