பயிற்சியாளருடன் விவாதத்தில் ஈடு பட்டதால் நான்கு முதல்-நிலை கிரிக்கெட் போட்டிகளுக்கு கவுதம் கம்பிருக்கு தடை

பயிற்சியாளர் கே.பி. பாஸ்கருடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டெல்லி ரஞ்சி அணியின் கேப்டன் கவுதம் கம்பிரை நான்கு முதல்-நிலை கிரிக்கெட் போட்டிகள் விளையாட டெல்லி கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

“டெல்லி கிரிக்கெட் வாரியம் அனுப்பிய டெல்லி அணி தற்போது ஒரிசாவில் இருக்கிறது, அங்கு கேப்டன் கவுதம் கம்பிருக்கும் பயிற்சியாளர் பாஸ்கர் பிள்ளை அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், பாஸ்கர் பிள்ளை புகார் அளித்தார். மார்ச் 10, 2017 அன்று இருவரையும் நாங்கள் சந்தித்தோம். இந்த பிரச்சனை கூடிய சீக்கிரம் தீராது என்று தெரிகிறது.”

“குழு நிர்வாகிகள் இதை ஒப்புக்கொண்டனர், இதனால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.”

“மேலே கூறப்பட்ட உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த குழு உறுப்பினர்கள். பயிற்சியாளரான திரு. பிள்ளையிடம் கவுதம் கம்பிர் வாக்குவாதம் செய்தது பொருத்தமற்றது. அத்தகைய பொருத்தமற்ற நடத்தை ஒரு விகிதாசாரமான மனிதர் மீது மட்டும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் இது ஒரு தடுப்பு விளைவு கொண்டது, அது மீண்டும் மீண்டும் செய்யப்படாது, அத்தகைய பிரச்சினைகள் அனைத்து குழு உறுப்பினர்களாலும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும்,” என சென் கூறினார்.

இளம் வீரர்களான உன்முக் சந்த், நிதிஷ் ராணா, நவதீப் சைனி ஆகியோருடன் விளையாடுவதால் பாஸ்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கவுதம் கம்பிர். 2015-இல் இந்திய அ அணிக்கு இருந்த உன்முக் சந்தை அணியில் இருந்து தூக்கி இருந்தார்.

நிதிஷ் ராணா மூன்று போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் போல் விளையாடாததால், அவருக்கு பதிலாக உன்முக் சந்தை அணியில் சேர்த்தனர். அந்த தொடரில் பகுதி-சுற்று போட்டிகளுடன் வெளியே வந்ததால், கோபமடைந்த கம்பிர், சந்தை அணியில் சேர்த்த பாஸ்கரிடம் சண்டை போட்டார். இதை கேள்வி பட்ட டெல்லி கிரிக்கெட் வாரியம், இருவரையும் மார்ச் மாதம் விசாரித்தது. கம்பிர் மேல் தப்பிருந்ததால், 4 போட்டிகளில் விளையாட தடை விதித்தது டெல்லி கிரிக்கெட் வாரியம்.

அந்த அணியில் மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணிக்காக விளையாட ரிஷப் பண்ட் வந்து விட்,டால், அந்த அணிக்காக யார் விக்கெட்-கீப்பிங் செய்வதென்று. மோஹித் ஆலவாய் மற்றும் அர்ஜுன் குப்தா ஆகியோர் அந்த இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.