எதுவும் தெரியாம என்ன திட்டாதீங்க… உண்மையில் நடந்தது இது தான்… நான் செஞ்சதுல எந்த தப்பும் கிடையாது; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – நேப்பாள் இடையேயான போட்டியின் போது ரசிகர்களை நோக்கி நடு விரலை காட்டியதற்கான உண்மை காரணத்தை கவுதம் கம்பீரே வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விராட் கோலி – கவுதம் கம்பீர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு கவுதம் கம்பீர் தான் முழு காரணம் என்பதால், விராட் கோலியின் ரசிகர்கள், கவுதம் கம்பீர் செல்லும் இடம் எல்லாம் கோலி, கோலி என கூச்சலிட்டு அவரை கடுப்பாக்கி வருகின்றனர்.
ரசிகர்களின் கூச்சலிற்கு கவுதம் கம்பீரும் அந்த இடத்திலேயே பதிலடியும் கொடுத்து வருகிறார். இன்று வெளியான வீடியோ ஒன்றில் கவுதம் கம்பீர் ரசிகர்களை நோக்கி தனது நடு விரலை காட்டியது பதிவாகி, அது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகவும் பரவியது.
இந்தியா – நேபாள் இடையேயான போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் கவுதம் கம்பீரை பார்த்து கோலி, கோலி என கூச்சலிடத்தால், இதுவரை தனது வாயில் விரலை வைத்து பதிலடி கொடுத்து வந்த கம்பீர், இந்த முறை தனது நடு விரலை காட்டி அநாகரீகமாக பதிலடி கொடுத்ததாக கூறப்பட்டது.
இந்தநிலையில், ரசிகர்களை நோக்கி தனது நடு விரலை காட்டியதற்கான காரணத்தை தற்போது கவுதம் கம்பீரே வெளியிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுதம் கம்பீர், “ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின் மூலம் பரப்பப்படுவது உண்மை அல்ல. ரசிகர்கள் கோலி பெயரை உச்சரித்து கூச்சலிடவில்லை. அவர்கள் இந்தியாவிற்கு எதிரான கோசங்களை எழுப்பினர், இதன் காரணமாகவே நான் எனது பதிலடியை கொடுத்தேன். எனது நாட்டை பற்றி யாராவது தவறாக பேசினால் என்னால் பொறுத்து கொள்ள முடியாது. நான் செய்தது தவறாக இருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை, இது போன்று இனி யார் எனது நாட்டிற்கு எதிராக பேசினாலும் நான் இதே போன்று தான் பதிலடி கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன என்பது கவுதம் கம்பீருக்கும், கடவுளுக்கும் தான் வெளிச்சம்…