இது முட்டாள்தனமான முடிவு; இந்திய அணி மீது கவுதம் கம்பீர் காட்டம் !!

இது முட்டாள்தனமான முடிவு; இந்திய அணி மீது கவுதம் கம்பீர் காட்டம்

கே.எல் ராகுலை துவக்க வீரர் வரிசையில் இருந்து மாற்றியது முட்டாள்தனமான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கேஎல் ராகுல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிரந்தரமாக களம் இறக்கப்படாமல் எந்த இடத்திலும் களம் இறக்கப்படுகிறார். விக்கெட் கீப்பிங் பணியுடன் அதை சிறப்பாக செய்து வருகிறார்.

தவான் இல்லாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். ஆனால் ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்படுவார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொடக்க வீரர் வரிசையில் இருந்து கேஎல் ராகுலை கீழே இறக்குவது சிறந்ததாக இருக்காது என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

Indias Shreyas Iyer (L) celebrates his 100 runs with KL Rahul (R) during the first One Day International cricket match between New Zealand and India at Seddon Park in Hamilton on February 5, 2020. (Photo by MICHAEL BRADLEY / AFP) (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

 

இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘கேஎல் ராகுலை டாப் ஆர்டர் வரிசையில் இருந்து கீழே இறக்கப்பட்டால் இது சிறந்ததாக இருக்காது. இந்தியா ராகுல், அகர்வால் காம்பினேசனுடன் சென்றால், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக பணியாற்றலாம். இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து கேஎல் ராகுல். விக்கெட் கீப்பராக அவர் சிறப்பாக வகையில் செயல்படுகிறார். ஆனால், 50 ஓவர் கிரிக்கெட்டில் அவரை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர் மீது அதிகமான சுமை ஏற்படும்’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.