தேவையே இல்லாம இவருக்கு ஏண்டா டீம்ல இடம்..? இவர தூக்கிட்டா எல்லாம் சரியாகிடும்; கவுதம் கம்பீர் சொல்கிறார் !!

தேவையே இல்லாம இவருக்கு ஏண்டா டீம்ல இடம்..? இவர தூக்கிட்டா எல்லாம் சரியாகிடும்; கவுதம் கம்பீர் சொல்கிறார் !!

டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முக்கியமான பலவீனத்தை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, நடப்பு டி.20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி சுற்று வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியையும், இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியையும் வீழ்த்திய இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து, அதன்பின் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நூழிலையில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி எவ்வித பிரச்சனையுமின்றி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

லீக் போட்டிகளை இந்திய அணி இலகுவாக கடந்திருந்தாலும், தனது அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை சந்திக்க உள்ளதால் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்திய அணி சரி செய்யப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்தான தங்களது கருத்துக்களையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், இந்திய அணியில் தற்போதும் இருக்கும் பெரிய பிரச்சனை ஒன்றை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “இந்திய அணியில் தற்போதும் இருக்கும் இருக்கும் ஒரு பலவீனம் என்றால் அது சுழற்பந்து வீச்சு தான். இந்திய அணி ஒரு வ்ரிஸ்ட் ஸ்பின்னருடன் களமிறங்க வேண்டும், ஆனால் இந்திய அணியோ தொடர்ந்து அஸ்வினுக்கே இடம் கொடுத்து வருகிறது. அஸ்வினால் பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு ஓரளவிற்கு பங்களிப்பு கொடுக்க முடியும் என்பதன் காரணமாகவே அஸ்வினுக்கு இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து வருகிறது. ஆனால் என்னை பொறுத்தவரையில் இது தவறான முடிவு தான், அனைத்து போட்டிகளிலும் அஸ்வினின் பேட்டிங்கை நம்பியிருக்க வேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்படாது, இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டை இழக்கும் சில போட்டிகளில் மட்டுமே அஸ்வினுக்கு பேட்டிங்கில் வாய்ப்பே கிடைக்கும். எனவே அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நியூசிலாந்து அணியின் இஷ் சோதி பந்துவீச்சில் எவ்வாறு செயல்பட்டு வருகிறார் என்பதை அனைவரும் பார்த்து வருகிறோம், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சிற்கும் சாதகமானதாக உள்ளது, இந்திய அணி இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

Mohamed:

This website uses cookies.