நான் பார்த்ததில் மிகச்சிறந்த வீரர் இவர் தான்; கவுதம் கம்பீர் சொல்கிறார் !!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீர் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்தியாவுக்கு கிடைத்ததிலேயே மிகவும் சிறந்த மேட்ச் வின்னர் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.


அனில் கும்ப்ளே தனது கிரிக்கெட் வரலாற்றை 1990இல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடங்கினார் அன்று முதல் இந்திய அணியின் முக்கிய வீரராக திகழும் அனில் கும்ப்ளே, டெஸ்ட் தொடரில் 619 விக்கெட்களை வீழ்த்தி உலகின் அதிகமான விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் இன்றுவரை இவரது சாதனையை எந்த ஒரு இந்திய வீரர் ஆடும் முறியடிக்க முடியவில்லை முதல் இரண்டு இடங்களில் முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708) உள்ளனர்.

இவர் தனது காலகட்டத்தில் விளையாடிய அனைத்து விதமான கிரிக்கெட் ஜாம்பவான்களை திணறடித்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் இவர் 2008இல் தனது ஓய்வை அறிவித்தார் அதன் பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இவர் செயலாற்றினார். பின் இவருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட கருத்து முரண் காரணமாக இவர் தனது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார், அதற்கு பதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார்.


அனில் கும்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்,மேலும் 261 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 337 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார், டெஸ்ட் போட்டியில் குறிப்பாக 35 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியும் 8 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியும் சாதனை படைத்துள்ளார்.


அனில் கும்ளே பற்றி கௌதம் காம்பீர் கூறியதாவது, இந்திய அணியின் இதுவரை யாரும் கண்டிராத வீரர் அனில் கும்ப்ளே தான். மேலும் இவர் இந்திய அணியின் மேட்ச் வின்னராக எப்பொழுதும் திகழ்ந்தார். கிரிக்கெட் வரலாற்றில் ஜிம் லீகர்க்கு பிறகு ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை இவரையே சேரும் என்று பாராட்டினார்.

1999 இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்26.3 ஓவர்கள் வீசி74 ரன்கள் மட்டும் கொடுத்து 10 விக்கெட்களை வீழ்த்தினார்.இந்த சாதனையை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.


அனில் கும்ளே தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Mohamed:

This website uses cookies.