கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய வீரர் கம்பீர், அரசியலில் ஈடுபட்டு வருவதுடன் ஐபிஎல் அணியின் பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், ஆரம்பம் முதல் 2017ஆம் ஆண்டு வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதனால், கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய கம்பீர் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (அப்போதைய, டெல்லி டேர்டெவில்ஸ்) அணிக்காக கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால், தாமாக முன்வந்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அதன்பின் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் ஒரே வருடத்தில், அரசியலில் களம் இறங்கினார். டெல்லியில் பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளராக ஜி.எம்.ஆர். குரூப், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய குரூப்புகள் உள்ளன. இரண்டும் தலா 50 சதவீதம் பங்குகள் வைத்துள்ளன. கடந்த ஆண்டு ஜிஎம்ஆர் குரூப் 50 சதவீத குரூப்பை 500 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
தற்போது, ஜிஎம்ஆர் குரூப் வசம் இருக்கும் 50 சதவீத பங்குகளில் இருந்து 10 சதவீத பங்குகளை கம்பீர் வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த 10 சதவீத பங்குகளில் மதிப்பு சுமார் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஜிஎம்ஆர் குரூப் அனுமதித்தால், உடனடியாக அதற்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்ற என்கிற தகவல்களும் கசிகின்றன.