இரண்டு மாதம் வெளியில் அமர்ந்த பிறகு, மீண்டும் கேப்டன் ஆகா தயாராக உள்ளேன் என டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கம்பிர் தெரிவித்துள்ளார்.
கடந்த பல சீசன்களாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வந்த கம்பிர், 2018ம் ஆண்டுக்கான ஐபில் அணியின் ஏலத்தில் கொல்கத்தா அணியால் வேண்டாம் என விடப்பட்டவுடன் டெல்லி அணிக்காக 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
முதல் சில போட்டிகளில் தனது கேப்டன் பொறுப்பில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததால், தாமாக முன்வந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக கூறினார். மேலும், தான் அணியில் ஆடவில்லை என கூறி வெளியில் அமர்ந்துகொண்டார்.
அதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை வகித்து வந்தார். ஷ்ரேயஸ் கேப்டன் பொறுப்பில் டெல்லி அணி ஒரு சில வெற்றிகளை குவித்தாலும், மேலும் சில தோல்விகளால் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
காம்பிர் கேப்டன் பொறுப்பு கேள்விக்குறியானதற்கு காரணம்
கம்பிர் கேப்டன் பொறுப்பு கேள்விக்குறியானதற்கு, அவரின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அதிகமாக இருந்தது தான் காரணமாக தான். டெல்லி பயிற்சியாளர் பரிந்துரைத்தது யாதெனில், கம்பிர் தனது கேப்டன் பொறுப்பை விட்டு இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும். டெல்லி அணிக்கு எதிர்காலத்திற்கு இது தான் சிறந்தது எனவும் கூறினார்.
காம்பிர் கூறுகையில், ஐபில் போட்டிக்காக நான் கடினமாக பயிற்சி செய்து வருகிறேன். எனது திட்டத்தில் நான் தெளிவாகவும், யுக்திகளுடனும் உள்ளேன்.
மேலும், இரண்டு மாதம் இடைவெளி போதுமானதாக இருந்தது. மீண்டும் டெல்லி அணி கேப்டன் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளேன் எனவும் கூறினார்.