போற போக்க பாத்தா எதுவும் தேறாது போல… சீக்ரம் நடத்துங்க! கங்குலிக்கு கம்பிர் அட்வைஸ்!

ஒட்டுமொத்த மக்களின் மனநிலையையும் மாற்றுவதுதான் இப்போதைக்கு சிறந்த வழி என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த 13-வது ஐபிஎல் சீசன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்வதால் இத்தொடர் நடப்பது சந்தேகம்தான் எனத் தெரிகிறது.

இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு கோப்பை பெற்று தந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பிர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த சூழ்நிலையும் மக்களுக்கு கடினமாக மாறிவிட்டன.

நெருக்கடியான இந்த நேரத்தில் நாட்டு மக்களின் மனஉறுதி சற்று குலைந்து போயுள்ளன. ஒரு அரசியல்வாதி என்ற முறையில் எது முக்கியம் என என்னிடம் கேட்டால், மக்களின் உயிர்களை காப்பாற்றுவதுதான் முக்கியம் என்பேன். எனினும் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையையும் மாற்றுவதுதான் இப்போதைக்கு சிறந்த வழி என கருதுகிறேன்.

Kolkata Knight Riders captain Gautam Gambhir celebrates his fifty during match 11 of the Vivo 2017 Indian Premier League between the Kolkata Knight Riders and the Kings X1 Punjab held at the Eden Gardens Stadium in Kolkata, India on the 13th April 2017
Photo by Ron Gaunt – Sportzpics – IPL

இதற்கு ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட வேண்டும். இதைவிட வேறு சிறந்த வழி எதுவும் இல்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் ஐ.பி.எல்., முக்கியமா என எல்லோரும் கேள்வி எழுப்புவார்கள்.

ஆனால் ஐ.பி.எல்., நடத்தப்பட்டால் எந்த அணி கோப்பை வெல்கிறது, எந்த அணி தோற்கிறது என்று பார்க்க மாட்டார்கள். ஒட்டுமொத்த இந்தியாவின் உணர்வை மாற்றியதாகத்தான் இத்தொடரை பார்ப்பர்.

கட்டாயம் வேண்டும். தற்போதைய நிலையில் ஒட்டுமொத்த உலகமும் நின்றுவிட்டது. நம்மைச் சுற்றிலும் தவறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் மக்கள் ஐ.பி.எல். போட்டிகளை பார்க்கத் துவங்கி விட்டால், அனைத்து சூழ்நிலையும் மாறிவிடும். கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஐ.பி.எல். தொடர்களை காட்டிலும் இந்த ஆண்டு தொடர் நடப்பது மிக முக்கியம் என கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sathish Kumar:

This website uses cookies.