டெல்லி கிரிக்கெட்டில் இனி கம்பிர் சொல்வதுதான் நடக்கும் – டெல்லி கிரிக்கெட் தலைவர்

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆய்வாளராக கௌதம் கம்பீர் பணியாற்றுவார் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ரஜத் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரஜத் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 27 முதல் 30 வரை தில்லி கிரிக்கெட் சங்க தேர்தல் நடைபெற்றது. பின்னர் 2-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைர் தேர்தலில் பத்திரிகையாளர் ரஜத் சர்மா சுமார் 54.40% வாக்குகள் ஆதரவாக பெற்று வெற்றி!!

இதில் முன்னாள் வீரர் மதன் லால்-ஐ விட 517 வாக்குகள் கூடப் பெற்று ரஜத் ஷர்மா, புதிய தலைவராக தேர்வானார். தில்லி கிரிக்கெட் சங்கத்தின் புதிய துணைத் தலைராக 48.87 சதவீத வாக்குகள் பெற்று ராகேஷ் குமார் பன்சால், தேர்வுசெய்யப்பட்டார். இவர் பிசிசிஐ-யின் தற்போதைய தற்காலிக தலைவரான சி.கே.கண்ணா மனைவி சசியை விட 278 வாக்குகள் கூடப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

ஷாஷியை சுமார் 278 வாக்குகள் வித்தியாசத்தில் ராகேஷ் வென்றார். ராகேஷுக்கு 1364 வாக்குகளும், ஷாஷிக்கு 1086 வாக்குகளும் கிடைத்தன. 

கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக, முன்னாள் விளையாட்டு குழு தலைவர் வினோத் திஹாரா (1374 வாக்குகளில்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மஞ்சித் சிங்கை (998), 376 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

கூட்டு செயலாளர் பதவிக்கு முன்னாள் பொருளாளர் ரவீந்தரின் சகோதரர் ராஜன் மன்சண்டா (1402 வாக்குகள்) தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளர் பதவிக்கு ஓம் பிரகாஷ் சர்மா (1365), இயக்குநராக, பயிற்சியாளர் சஞ்சய் பார்த்வாஜ், மகளிர் இயக்குநராக ரேணு கண்ணா தேர்வு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜத் ஷர்மா கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், தில்லி கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியாக உள்ளார். எனவே அவரை இச்சங்கத்தின் ஆய்வாளராக நியமித்துள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் தில்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வ செய்வார் என்றார்.

Editor:

This website uses cookies.