DDCA நிர்வாக குழுவில் சேர்த்ததால் கம்பிருக்கு புதிய பிரச்சனை

இந்திய அணியின் நட்சத்திர வீரர் மற்றும் தற்போதைய டெல்லி ரஞ்சி டிராபி அணியின் நட்சத்திர வீரர், கவுதம் கம்பிரை டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் சேர்த்தபிறகு கருத்து வேறுபாடு பிரச்சனையால் பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. லோதா கம்மிஷன் பரிந்துரை படி, விளையாடிக்கொண்டு இருக்கும் ஒரு வீரர் ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக குழுவில் இருக்க கூடாது.

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் குழுவில் சேர்த்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் கவுதம் கம்பிர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோருக்கு நன்றியையும் தெரிவித்தார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில், இதை பதிவிட்டிருந்தார் : “Had the honour of adjusting fields at Ferozeshah Kotla. Time to adjust ‘corridors’ at DDCA to help restore its glory days. Honoured to be Government Nominee on DDCA Managing Committee. Thanks @Ra_THORe #humbled,”

தற்போது டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார் கவுதம் கம்பிர். இதனால், போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கிரிக்கெட் சங்கத்தின் குழுவில் சேர முடியாது என லோதா கமிட்டியின் பரிந்துரை கூறுகிறது.

டி.டி.சி.ஏ.யின் டெல்லி உயர் நீதிமன்றம் நியமிக்கப்பட்ட நிர்வாகி, விக்ரம்ஜித் சென் தற்போதைய நடப்புக் குழுவில் ஒரு நிர்வாகக் குழுவின் எந்தவித முன்னேற்றமும் பற்றி தெரியவில்லை என கூறினார்.

“கவுதம் கம்பிரை நியமித்தது பற்றி எனக்கு அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. எந்த நிர்வாகக் குழுவையும் பற்றி எனக்குத் தெரியாது. மேலும் விவரங்களை அறிய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு நான் எழுதுகிறேன்,” என விக்ரம்ஜித் சென் கூறினார்.

“அவர் இப்பொழுதும் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறார், இதனால் அவரை நியமித்தது லோதா கமிட்டி ஒப்புக்கொள்ளுமா இல்லையா என்று தெரியவில்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.

கவுதம் கம்பிரின் நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த பிரச்சனை மேலும் நீடித்தால், அந்த பதவியை அவர் வேண்டாம் என்று தான் சொல்லுவார் என கூறினார்.

“தற்போது கவுதம் கம்பிருக்கு ஓய்வு பெரும் எண்ணம் இல்லை, அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவார். இதனை பற்றி பிரச்சனை வந்தால், அந்த பதவியை வேண்டாம் என்று கம்பிர் சொல்லிவிடுவார்,” என கம்பிரின் நண்பர் தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.