தம்பி விராட்.. எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க – கோஹ்லி மீது கடுப்பான ஜாம்பவான்!

வாய்விட்ட விராட் கோஹ்லி மீது கடுப்பான ஜாம்பவான் மற்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையேயான இரண்டவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது. இதன்மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

முதல் பகலிரவு டெஸ்ட் வெற்றி உட்பட, தொடர்ந்து 4 டெஸ்ட் இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற ஒரே அணி (146 வருட வரலாற்றில் முதல் முறை, விராட் கோலி தலைமையில்),  சொந்த மண்ணில் தொடர்ந்து 7 டெஸ்ட் போட்டி வெற்றிகள் மற்றும் சொந்த மண்ணில் தொடர்ந்து 12 டெஸ்ட் தொடரை வென்ற அணி என்று இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது.

தொடரை கைப்பற்றிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி “இந்திய அணியின் வெற்றி சவுரவ் கங்குலி காலத்தில்தான் தொடங்கியது” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ”இந்திய அணி கங்குலிக்கு முன்பே பல டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலியை புகழ்வதற்காக கேபடன் விராட் கோலி அப்படி பேசியிருக்கலாம். பலர் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி 2000க்கு பிறகு தோன்றியதாக நினைக்கிறார்கள். ஆனால் 1970களில் இருந்தே இந்தியா பல தொடர்களை சமன் செய்திருக்கிறது. அப்போதெல்லாம் விராட் கோலி பிறக்கக்கூட இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.