இந்த விசயத்திலும் நான் தான் பெஸ்ட்; கிறிஸ் கெய்ல் !!

இந்த விசயத்திலும் நான் தான் பெஸ்ட்; கிறிஸ் கெய்ல்

தான் ஆடிய நடனம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ஈரமான தரையில் தன்னால் மட்டும் தான் நடனம் ஆட முடியும் என கிறிஸ் கெய்ல் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், அதிரடியான பேட்டிங்கின் மூலம் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். தனது பேட்டிங்கின் மூலம் மட்டுமல்லாமல் அதை கடந்து தனது செயல்பாடுகளாலும் ரசிகர்களை மகிழ்விக்க கூடியவர் கெய்ல்.

இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடிய கெய்ல், லீக் போட்டிகளின் முதல் பாதியில் மிரட்டலாக ஆடினார். அதே இரண்டாவது பாதியில் சரியாக ஆடவில்லை. இரண்டாவது பாதி, பஞ்சாப் அணிக்கும் சிறப்பானதாக அமையவில்லை. கெய்ல் ஆடும் போட்டி என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறிவிடும். அந்தளவிற்கு எண்டெர்டெயின் செய்யக்கூடியவர் கெய்ல். ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் கெய்ல்.

ஐபிஎல் சீசனில் களத்தில் அவரது செயல்பாடுகள் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்த சீசனில் அரைசதம், சதம் ஆகியவை அடித்தபோது, பேட்டை கைகளின் போட்டு தாலாட்டுவது போன்ற செய்கை குறிப்பிடத்தக்கது. அதேபோல் களத்தில் சில சேட்டைகளையும் செய்வார். ஒரு போட்டியில், பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ராகுல், ஹெல்மெட் வாங்குவதற்காக சென்ற இடைவெளியில் அவரது க்ளௌசை மாட்டிக்கொண்டு விக்கெட் கீப்பிங் செய்வது போல் நின்றார்.

முகத்தை கைகளால் மூடியும் திறந்தும் விளையாடினார். இதுபோன்ற அவரது செய்கைகளும் ரசிகர்களை கவரும் விதமாக அமையும்

இதுபோன்று ஏதாவது செய்துகொண்டிருக்கும் கெய்ல், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். ஈரமான தரையில் தன்னால் மட்டுமே நடனம் ஆட முடியும் என பதிவிட்டு, அந்த வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஈரமான தரையில் நடனமாடினால் பொதுவாக வழுக்கிவிடும் அல்லவா..? ஆனால் அப்படி ஈரமான தரையில் கூட தன்னால் நடனமாட முடியும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Mohamed:

This website uses cookies.