வீடியோ: “ரூம் போட்டு பண்றத.. கிரவுண்டுலயா பண்ணுவிங்க?” நடு மைதானத்தில் பாக்., வீரர்கள் செய்த அசிங்கம்!
பாகிஸ்தான் வீரர்கள் இருவர் நடு மைதானத்தில் செய்த சில அசிங்கமான செயலால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பாக்., வீரர்கள் அவ்வப்போது ஏதேனும் ஒன்றை செய்து ரசிகர்களிடம் வாங்கிகட்டிக்கொள்வதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஹசன் அலி இதில் முதன்மையானவர் என்றே சொல்ல வேண்டும்.
தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பயிர்ச்சியின்போது ஹசன் அலி மற்றும் சக அணி வீரர் யாசிர் ஷா இருவரும் நடு மைதானத்தில் செய்த அசிங்கமான செயலின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பாக்., ரசிகர்களை தலை குனிய வைத்துள்ளது.
வீடியோ:
பாக்., சூப்பர் லீக்:
இத்தொடரில் முல்தான் அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா இருவரும் ஆடிவரும் பெஷாவர் அணி 9 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதியாகிவிடும்.
நேற்று நடைபெற்ற லாகூர் மற்றும் பெஷாவர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் லாகூர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதால், இந்த இழுபறி நீடிக்கிறது.