இவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுங்கள்! இந்தியாவின் எதிர்காலாம் இவர்தான்! முன்னாள் வீரர் ராமன் பேச்சு!

இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இன்று ஆரம்பமாகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி களம் இறங்கப் போகிறது. ஓபனிங் வீரர்களை பொறுத்தவரையில் ஷிகர் தவான் நிச்சயமாக இன்றைய போட்டியில் விளையாடுவார். அவருடன் இணைந்து விளையாட போகும் மற்றொரு வீரர் யார் என்கிற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிருத்வி ஷா, படிக்கல் மற்றும் ருத்ராஜ் என மூன்று வீரர்கள் அந்த இடத்தில் விளையாட தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய முன்னாள் வீரர் மற்றும் இந்திய மகளிர் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராமன் இலங்கைக்கு எதிராக நடக்கும் தொடர்களில் பிரித்வி ஷாவுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்

இந்திய அணியில் இதற்கு முன்னர் விளையாடிய பிரித்வி ஷா

பிரித்வி ஷா இதுவரை இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அந்த 3 ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 84 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தமாக 339 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் அவரேஜ் 42.38 ஆகும்.

கடந்த வருடம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இவர் சரியாக விளையாடவில்லை. அதற்கு பின்னர் படிப்படியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு பறிபோனது. மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் வண்ணம் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் மிக அற்புதமாக விளையாடினார்.

அதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார். தன்னுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்திய பிரித்வி ஷா இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்று விளையாடும் வாய்ப்பை தற்பொழுது பெற்றுள்ளார்.

பிரித்வி ஷாவுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்

ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணியில் ஓப்பனிங் வீரர்களை பொறுத்தவரையில் மூன்று வீரர்கள் இருக்கின்றனர். அதில் இளம் வீரரான படிக்கல் மற்றும் ருத்ராஜ் முதல் முறையாக இந்திய அணியில் விளையாட தயாராக உள்ளனர். இருப்பினும் என்னைப் பொருத்தவரையில் தற்பொழுது நடக்க இருக்கும் இலங்கைக்கு எதிரான தொடரில் பிரித்வி ஷாவை நிறைய போட்டிகளில் இந்திய நிர்வாகம் விளையாட வைக்க வேண்டும் என்று ராமன் வலியுறுத்தியுள்ளார்.

சென்ற ஆண்டு சரியாக விளையாடாத அவர் இந்த ஆண்டு உள்ளூர் போட்டியில் அதிரடியாக விளையாடி அதேசமயம் டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடியுள்ளார். அவருடைய திறமையை மீண்டும் நிரூபிக்க அவர் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாக இதை நான் பார்க்கிறேன்.

படிக்கல் மற்றும் ருத்ராஜ் இவர்கள் இருவருக்கும் நிச்சயமாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் இந்த தொடரில் இவர்கள் இருவரை காட்டிலும் முதன்மை வாய்ப்பு பிரித்திவி ஷாவுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும் என்றால் இறுதியாக இராமன் கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.