நாங்களெல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடுவதையே விரும்புகிறோம்! உலக கோப்பையை கூப்பில் போட்டுவிட்டு ஐபிஎல் தொடருக்கு தயாராகும் ஆஸ்திரேலிய வீரர்!
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எப்படியாவது ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது இந்த வருடம் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஒரு சர்வதேச தொடர் ஒத்தி வைக்கப்பட்டது போல் வீரர்கள் ரியாக்ட் செய்ய வில்லை ஒத்திவைக்கப்பட்டது நல்லதுதான் ஐபிஎல் தொடரில் ஜாலியாக ஆடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படித்தான் தற்போது மேக்ஸ்வெல் பேசியுள்ளார்
சொந்த மண்ணில் டி 20 உலகக்கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்ததாகவும் அதே நேரம் ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
துகுறித்து அவர், “சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடரை விளையாட எப்போதும் ஆவலாக காத்திருப்போம். ஐபிஎல் தொடரில் மற்றவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது, தனிமைப்படுத்துவது குறித்து எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். எல்லாம் சரியாக நடந்தால் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்ல காரணமே இருக்காது.
வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதைப் விரும்புவார்கள். உலகக் கோப்பையைப் போலவே சிறிய அளவில், ஐபிஎல் தொடரை பார்க்கிறார்கள். நானும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
அக்டோபரில் இருந்து ஓய்வு எடுத்து வரும் கிளென் மேக்ஸ்வெல், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 26 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் , மீண்டும் களத்தில் இறங்க மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.