40 பந்துகளில் 100… உலகக்கோப்பை தொடரில் தரமான வரலாறு படைத்த அதிரடி நாயகன் கிளன் மேக்ஸ்வெல் !!

40 பந்துகளில் 100… உலகக்கோப்பை தொடரில் தரமான வரலாறு படைத்த அதிரடி நாயகன் கிளன் மேக்ஸ்வெல்

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அசுரவேகத்தில் சதம் அடித்ததன் மூலம்  கிளன் மேக்ஸ்வெல் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 24வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகின்றன.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, மிட்செல் மார்ஸ் 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 104 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களிலும், லபுசேன் 64 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதன்பின் களத்திற்கு வந்த நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்த கிளன் மேக்ஸ்வெல் வெறும் 40 பந்துகளில் சதமும் அடித்து அசத்தினார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் வெறும் 40 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், கிளன் மேக்ஸ்வெல் பல்வேறு வரலாறுகளையும் படைத்துள்ளார். குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் மிக குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அதே போன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலிலும் மேக்ஸ்வெல் 4வது வீரராக இடம்பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்கள் பட்டியல்; 

கிளன் மேக்ஸ்வெல் – 40 பந்துகள் vs நெதர்லாந்து – 2023ம் ஆண்டு

மார்கரம் – 49 பந்துகள் vs இலங்கை – 2023ம் ஆண்டு

கெவின் ஓ பிரையன் – – 50 பந்துகள் vs இங்கிலாந்து – 2011ம் ஆண்டு

கிளன் மேக்ஸ்வெல் – 51 பந்துகள் vs இலங்கை – 2015ம் ஆண்டு

டிவில்லியர்ஸ் – 52 பந்துகள் vs வெஸ்ட் இண்டீஸ் – 2015ம் ஆண்டு

ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்கள் பட்டியல்; 

டிவில்லியர்ஸ் – 31 பந்துகள் vs வெஸ்ட் இண்டீஸ் – 2105

கேரி ஆண்டர்சன் – 36 பந்துகள் vs வெஸ்ட் இண்டீஸ் – 2014

ஷாகித் அப்ரிடி – 37 பந்துகள் vs இலங்கை – 1996

கிளன் மேக்ஸ்வெல் – 40 பந்துகள் vs நெதர்லாந்து – 2023

Mohamed:

This website uses cookies.