ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மக்ஸ்வெல் இன்ஸ்டாகிராமில் ஐபில் போட்டிகளில் தனது செயல்பாடு குறித்து தன்னை தானே கலாய்த்துக்கொண்டார்.
ஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் அதிரடி ஆட்டக்காரராக கிளென் மேக்ஸ்வெல் கடந்த சில மாதங்களாக தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இருந்தபோதிலும், ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் மேக்ஸ்வெல் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து அணியில் எடுத்து வருகிறார். அவர் கூறுகையில், மேக்ஸ்வெல் ஒரு ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய பேட்ஸ்மேன், தனி ஒருவனாக இருந்து மேட்சை முடிக்க கொடியவர் என கூறினார்.
இந்த வருட ஐபில் சீசனில் 12 போட்டிகள் ஆடி வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்தார். மிக மோசமான சராசரி 14.08 ஐ வைத்திருந்தார். இதற்க்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டார். காரணம், இவரை டெல்லி அணி 9 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இன்ஸ்டாகிராமில் கலாய்
இன்ஸ்டாகிராமில் புதிய வகை ஏற்பாடு ஒன்றை பயன்படுத்திய மேக்ஸ்வெல், “என்னிடம் கேள்வி கேளுங்கள்” என்ற வசதியை பயன்படுத்தி தன்னை பின்தொடர்பவர்களிடம் கேள்விகள் கேட்குமாறு பணித்தார்.
இதற்கு ரசிகர் ஒருவர், “நீங்கள் எப்போது ஐபில் போட்டிகள் சிறப்பாக ஆடுவீர்கள்?” என்ற கேள்விக்கு, கேளிக்கையாக இருக்கும்படி அவரது படத்தையே பதிவிட்டு அதற்கு 2014 என்ற பதிலையும் கூறினார்.
ஏனெனில், 2014ம் ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 போட்டிகளில் 552 ரன்கள் குவித்தார். அதில் 4 அரைசதங்களும் அடங்கும்.