எனது கிரிக்கெட் வாழ்க்கை வீணாவதற்கு காரணம் இவர்கள் தான் – கேஎல் ராகுல் காட்டம்

எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை வீணாவதற்கு காரணம் இவர்கள் தான் என கூறியுள்ளார் கேஎல் ராகுல்.

விண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 56 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார் கேஎல் ராகுல். துரதிஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

ஏற்கனவே விண்டீஸ் அணிக்கெதிராக டி20 போட்டியில் கேஎல் ராகுல் ஒரு சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கிடைக்கும் வாய்ப்புகளை ராகுல் சரியாக பயன்படுத்தி வந்தாலும், டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவருக்கென உறுதியான இடம் தற்போது வரை இல்லை. இந்த தொடரில் கூட, தவான் காயம் காரணமாக வெளியேறியதால் மட்டுமே இவருக்கு துவங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து 3வது டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு பேட்டியளித்த கேஎல் ராகுல் கூறுகையில்,

‘‘இந்திய அணியில் எனக்கு நெருக்கடி இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஒவ்வொரு தொடரிலும் அணிக்கு வருவதும் செல்வதுமாக இருந்தால், அது எந்தவொரு வீரருக்கும் எளிதானதாக இருக்காது. எந்தவொரு வீரனும் அணியில் நிரந்தர இடம்பிடிக்கவே விரும்புவர். என்னவாக இருந்தாலும், பிசிசிஐ மற்றும் கேப்டன் எடுப்பது தானே இறுதி முடிவு.

அதேநேரம், இது போன்ற நெருக்கடியான சூழலும் வீரனுக்கு சகஜம் தான். சர்வதேச போட்டியை நெருக்கடியாக எதிர்கொண்டால்தான், எளிதாக சென்று ரன்கள் அடிக்க முடியும். கிடைக்கும் வாய்ப்பை எனக்கான ஒன்றாக மாற்றி வருகிறேன். அதை தொடர்ச்சியாக செயல்படுத்த விரும்புகிறேன்.

மேலும், டி20 கிரிக்கெட் போட்டி ஓது வீரர்களின் நம்பிக்கை மற்றும் மனநிலையை பொறுத்துதான்’’ என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.