விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அதை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் – அபிமன்யூ ஈஸ்வரன்
ஜூன் 18 முதல் ஜூன் 23 வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. நேற்று பிசிசிஐ இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் 4 வீரர்கள் ஸ்டாண்ட் பை வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். அந்த நான்கு வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து இறங்காத இரண்டு வீரர்கள் இடம் பெற்றது அனைத்து இந்தியர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதில் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறவர் அபிமன்யு ஈஸ்வரன்.
உள்ளூர் ஆட்டங்களில் மிக அற்புதமாக வழியாக கூட வீரர் இவர். இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஆக இவர் இந்திய அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இங்கிலாந்துக்கு பயணம் செய்ய உள்ள அபிமன்யு ஈஸ்வரன் ஒரு சில வார்த்தைகளை பேசியுள்ளார்.
ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் உடன் நான் டிரஸ்ஸிங் ரூம்மை பகிர்ந்திருக்கிறேன்
இங்கிலாந்துக்கு எதிரான நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரிஷவ் பேட்ஸ்மேனாக நான் கலந்து கொண்ட போது, ஜாம்பவான் வீரர்கள் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் உடன் நான் நேரத்தை செலவிட்டு இருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் ஒரு சில விஷயங்களை கற்று இருக்கிறேன்.
அவர்கள் பேட்டிங்கில் எவ்வளவு நேர்த்தியாக விளையாடுகிறார்கள் என்று நான் வியந்து போனேன். இன்று அவர்கள் எப்படி ஆடுகிறார்களோ அதை அப்படியே அதற்கு அடுத்த நாளும் வந்து தொடர்ந்து விளையாடுவார்கள். ஒரு கிரிக்கெட் வீரர் எப்படி தொடர்ச்சியாக நிலையாக விளையாடவேண்டும் என்பதை நான் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கற்றுக்கொண்டேன். எனக்கு அது பின்னாளில் உதவும் என்று கூறியுள்ளார்.
அபிமன்யு ஈஸ்வரனின் உள்ளூர் ரெக்கார்டுகள்
25 வயதே ஆன அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளூர் ஆட்டங்களில் அற்புதமாக விளையாடக் கூடியவர். பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் தற்போது வரை 64 போட்டியில் களமிறங்கி 4401 ரன்களை குவித்துள்ளார். பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் இவரது பேட்டிங் அவரேஜ் 43.50 ஆகும்.
2018-19 ஆம் ஆண்டு நடைபெற்ற இரஞ்சி டிராபி தொடரில் ஓபனிங் பேட்ஸ்மேன் களமிறங்கி அந்த தொடரில் இவர் மொத்தமாக 861 ரன்கள் குவித்தார். அதே தொடரில் இவரது பேட்டிங் அவரேஜ் 95.66 ஆகும். மிக அற்புதமாக விளையாடக்கூடிய வீரர் நிச்சயமாக பின்னாளில் இந்திய அணிக்கு களமிறங்குவார் என அனைத்து ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.