தென் ஆப்பிரிக்க அணிக்காக மீண்டும் களமிறங்க உள்ள ஏபி டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க அணிக்காக மீண்டும் களமிறங்க உள்ள ஏபி டிவில்லியர்ஸ்

ஏபி டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணியின் ஒரு தலைசிறந்த வீரர் என்பது எவராலும் மறுக்க முடியாது. 15 வருடங்களாக தென்னாபிரிக்க அணி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து உலக கிரிக்கெட் ரசிகர்களையும் அவரது ஆட்டம் மூலம் ரசிக்க வைத்தவர் அவர். ஆனால் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் தனது ஆய்வறிக்கையை அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அளித்தார். 34 வயதில் தான் ஓய்வு பெற விரும்புவதாகவும் இனி நான் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட போவதில்லை என்றும் அறிவித்தது அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது

.

அதன்பின்னர் டி பி டி வில்லியர்ஸ் தற்போது வரை பல உலக நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் லீக் தொடரில் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். 37 வயதிலும் இன்னும் அதை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஏபி டிவிலியர்ஸ் மறுபடியும் தென்ஆப்பிரிக்க அணியில் விளையாட போவதாக தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் டைரக்டர் கிரீம் ஸ்மித் தற்பொழுது தெரிவித்துள்ளார்.

ஏபி டிவிலியர்ஸ் உடன் மீண்டும் இணையப் போகும் கிறிஸ் மோரிஸ் மற்றும் இம்ரான் தாஹிர்

இதுகுறித்து பேசியுள்ள கிரீம் ஸ்மித், ஏபி டிவிலியர்ஸ் எப்பொழுது வேண்டுமானாலும் அணியில் திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் சொல்லி இருந்தோம். அதற்கு அவரும் சரி என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்டு இறுதியில் அவரது உடல் பரிசோதனை மேற்கொண்டு, எல்லாம் சரியாக வந்தால் தென் ஆப்பிரிக்க அணிக்கு உலக கோப்பை டி20 தொடரில் விளையாட சம்மதம் என்று தெரிவித்திருந்தார்.

தற்பொழுது அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள வேளையில், ஏபி டிவிலியர்ஸ் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளார் என கிரீம் ஸ்மித் தற்போது தெரிவித்துள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் மட்டுமல்லாமல் கிறிஸ் மோரிஸ் மற்றும் இம்ரான் தாகிர் ஆகியோரும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இவர்களது வருகை தென் ஆப்பிரிக்க அணியின் பலத்தை சற்று அதிகரிக்கும் என்றும், உலகக் கோப்பை டி20 தொடருக்கு முன்னதாக இந்த போட்டி தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களுக்கு ஒரு பலப்பரிட்சையாகவும் இருக்கும் என்று இறுதியில் கிரீம் ஸ்மித் கூறி முடித்தார்.

மீண்டும் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஏபி டிவிலியர்ஸ் விளையாடப் போகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் அதிக அளவில் ரசிகர்கள் தங்களது சந்தோச பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். மூன்று வருடம் கழித்து மீண்டும் தென்ஆப்பிரிக்க அணியில் ஏபி டிவிலியர்ஸ் விளையாடப் போவது அந்த அணியின் பலத்தை இரட்டிப்பாக போகிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

Prabhu Soundar:

This website uses cookies.