நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை தன் வசம் கைப்பற்றியது, இது போன்று ஒரு மிகவும் திரில் ஆன ஐபிஎல் இறுதி பொடியை யாரும் பாத்து இருக்க முடியாது.
அந்த பதட்டமான சூழலில் கடைசி நேர பரபரப்புகளுக்கு மத்தியில் அத்தனை பேரின் கவனத்தையும் இந்த பெண்மணி தன் பக்கம் ஈர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணி ஜெயிக்குமா, ஜெயிக்காதா என்று பெரும் பதட்ட மன நிலையில் அந்த அணியின் ரசிகர்கள் இருந்தனர். அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்த இந்தப் பெண்மணி செய்து கொண்டிருந்த பிரார்த்தனைதான் அத்தனை பேரையும் கவர்ந்தது.
இறுதிவரை மும்பை அணி வெற்றி பெற இந்த பாட்டி தன் கண்களை மூடி விடாமல் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார்.
கடைசியில் அந்த பாட்டி கடவுளிடம் வேண்டியது போல மும்பை அணியும் யாரும் நம்ப முடியாது அளவிற்கு வெற்றியை பெற்றது