முன்னாள் நியூசிலாந்து வீரர் கிராண்ட் எலியட், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 21), அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பர்மிங்காம் பியர்ஸுடன் ஆட்டத்தில் அவரது அணி குவாலிபைர் க்கு கூடத்தகுதி பெறாததால் வலது கை பேட்ஸ்மேன் ஓய்வு முடிவுக்கு வந்தார்.
எலியட் தனது முதல்-வகுப்பு அறிமுகத்தை 1996 ஆம் ஆண்டில் தொடங்கினார் மற்றும் 83 முதல்-வகுப்பு விளையாட்டுகள், 211 லிஸ்ட் ஏ மற்றும் 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2001 ஆம் ஆண்டு தனது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறி, மார்ச் 2008 இல் நியூசிலாந்து அணிக்கு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். எலியட், நியூசிலாந்தின் 13வீரர்கள் கொண்ட அணியில் ஹாமில்டனுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றார்.
Elliott played for Birmingham Bears (Credits: Getty)
எலியட் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார், மேலும் அவர் கூறியதாவது,
“ஜோகன்னஸ்பர்க்கில் துவங்கி பர்மிங்ஹாமில் முடிந்தது,” என அவர் இன்ஸ்டாகிராமில் எழுதினார்.
“நான் 12 வயதாக இருக்கையில், என் வாழ்க்கை இலக்குகளை முடிவு செய்தேன். அதாவது, ஒரு உலகக் கோப்பையில் விளையாடுவது , சர்வதேச கிரிக்கெட் அணியில் விளையாடுவது மற்றும் கவுண்டி கிரிக்கெட்டை விளையாடுவது.
“இந்த பயணத்தை சிறப்பாக செய்துள்ள நான் சந்தித்த அனைத்து மறக்கமுடியாதவை. மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. அனைத்து கடினங்களிலும் பக்கபலமாக இருந்தும் எனக்கு ஆதரவளித்த குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இத்தருணத்தில் நான் கடமை பட்டிருக்கிறேன்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எலியட், முதல் தர கிரிக்கெட்டில் 3883 ரன்கள் எடுத்தார். அவர் 211 லிஸ்ட் ஏ மற்றும் 150 டி20 போட்டிகளை விளையாடியுள்ளார். 7,000 ரன்கள் மற்றும் 242 விக்கெட்டுகளையும் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2015 ம் ஆண்டு ஈடன் பார்க் டி20 உலக கோப்பை அரையிறுதியில் ஒரு வியத்தகு வெற்றியைப் பெற கடைசி பந்தில் ஆறு ரன்களை எட்டும் நிலை இருந்த போது, அசாத்தியமாக சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார்.
எலியட் நியூசிலாந்திற்காக ஐந்து டெஸ்ட் மற்றும் 16 டி20 களை ஆடினார், ஆனால் ஒருநாள் போட்டியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தார், அங்கு அவர் 83 ஆட்டங்களில் விளையாடி, சராசரியாக 34.06 சராசரியில் 2000 ரன்களை எடுத்தார், மேலும் 39 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.