டி20க்கு சற்றும் குறையாத திக் திக் டெஸ்ட் மேட்ச்… 1 ரன்னில் வெற்றி… மரண கம்பேக் கொடுத்து இங்கிலாந்துக்கு ஆப்படித்த நியூசிலாந்து!

டி20க்கு சற்றும் குறையாத திக் திக் டெஸ்ட் மேட்ச்... 1 ரன்னில் வெற்றி... மரண கம்பேக் கொடுத்து இங்கிலாந்துக்கு ஆப்படித்த நியூசிலாந்து! 5டி20க்கு சற்றும் குறையாத திக் திக் டெஸ்ட் மேட்ச்... 1 ரன்னில் வெற்றி... மரண கம்பேக் கொடுத்து இங்கிலாந்துக்கு ஆப்படித்த நியூசிலாந்து! 5

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி பலரையும் மிரள வைத்துள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.

சமீபகாலமாக அதிரடியான அணுகுமுறையுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. நட்சத்திர வீரர் ஜோ ரூட் 153 ரன்கள், அதிரடியான இளம் வீரர் ஹாரி புரூக் 186 ரன்கள் அடிக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. கேப்டன் டிம் சவுத்தி 49 பந்துகளில் 73 ரன்கள் விளாச, அணியின் ஸ்கொர் 200ஐ கடந்தது. இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் செய்யுமாறு இங்கிலாந்து அணி பணித்தது.

2வது இன்னிங்ஸ் பேட்டிங் துவங்கிய நியூசிலாந்து அணிக்கு, துவக்க வீரர் டாம் லேத்தம்(83), கான்வெ(61) இருவரும் அபாரமான துவக்கம் கொடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. பின்னர் வந்த வில்லியம்சன் 132 ரன்கள், டேரில் மிட்ச்சல் 54 ரன்கள், டாம் பிலண்டல் 90 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி வலுவான நிலையை எட்டியது.

நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 483 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 257 முன்னிலையும் பெற்றது. 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்திருந்தது.

இன்று 5ம் நாள் ஆட்டத்தை துவங்கிய இங்கிலாந்து அணி, கட்டாயம் வெற்றி பெற்று தொடரை 2-0 என்கிற கணக்கில் கைப்பற்றலாம் என்று காத்திருந்தனர். ஆனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்து மிரளவைத்தனர்.

முதல் இன்னிங்சில் சதமடித்த ரூட் 95 ரன்களுக்கு அவுட்டானார். ஹாரி புரூக் ஒரு பந்தும் பிடிக்காமல் ரன் அவுட்டாகினர். இதனால் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்திக்க துவங்கியது. அடுத்து வந்த ஸ்டோக்ஸ்(33), ஃபோக்ஸ்(35) இருவரும் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நெருங்க முயற்சித்தனர். இவர்களின் விக்கெட்டை சரியான நேரத்தில் எடுத்த நியூசிலாந்து பவுலர்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்தது.

5ம் நாள் முடிய இன்னும் நிறைய ஓவர்கள் இருந்தன. நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 1 விக்கெட் தேவை, அதேநேரம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என இருந்தது. வாக்னர் வீசிய பந்தை ஆண்டர்சன் அடிக்க முயற்சிக்க, கீப்பர் வசம் பிடிபட்டு அவுட்டானார். இதனால் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடர் 1 – 1 என சமன் ஆனது.

வாக்னர்(4 விக்கெட்டுகள்), சவுத்தி(3 விக்கெட்டுகள்), மேட் ஹென்றி(2 விக்கெட்டுகள்) மூவரும் நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்து,  இங்கிலாந்து அணி பெறவிருந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தடுத்தனர்.

Mohamed:
whatsapp
line