அபாரமான பார்மில் இருந்த ஜோஸ் பட்லர் ஸ்டம்பை தெறிக்கவிட்டு டக் அவுட் செய்துள்ளார் முகமது ஷமி. இதன் வீடியோ கீழே உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வரும் லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் சஞ்சு சாம்சன்.
இதனையடுத்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் 45(34) ரன்கள், டேவிட் மில்லர் 46(30) ரன்கள் அடித்து பேட்டிங்கில் நம்பிக்கை கொடுத்தனர். ஹர்திக் பாண்டியா 28(19) ரன்கள் மற்றும் அபிநவ் மனோகர் 27(13) ரன்கள் அடித்து இருவரும் மிடில் ஆர்டரில் பாட்னர்ஷிப் அமைக்க உதவி செய்ததால் தடுமாறி வந்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 177 ரன்கள் அடித்தது.
இந்த மைதானம் 200 ரன்கள் அடிப்பதற்கு சாதகமாக இருக்கிறது. 178 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி எளிதாக சேஸ் செய்து விடும் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வந்தன. அந்த நம்பிக்கையுடன் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, வழக்கம்போல பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஓபனிங் இறங்கினர்.
கடந்த போட்டிகளில் இந்த ஓபனிங் ஜொடி எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்து பவர்-பிளே ஓவர்களில் கதிகலங்க வைத்திருக்கிறது. ஆனால் இம்முறை குஜராத் பவுலர்கள் இந்த ஜோடியை கதிகலங்க வைத்தனர்.
பந்தை பேட்டில் படுவதற்க்கே ஜெய்ஸ்வால் தடுமாறிவந்தார். சேயான நேரத்தில் இவரது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா தூக்கினார். 1 ரன்னில் வெளியேறினார்.
ராஜஸ்தான் அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்து வந்த பட்லர், ஷமி ஓவரில் மிகவும் திணறினார். அப்போது இன்-ஸ்விங் பந்தை வீசி பட்லரின் விக்கெட்டை போல்டு செய்து எடுத்தார் ஷமி. இதன் விடியோவை கீழே பார்ப்போம்.
ஜோஸ் பட்லர் ஸ்டம்ப்பை பறக்கவிட்ட முகமது ஷமி வீடியோ:
அடுத்ததாக உள்ளே வந்த தேவ்தத் படிக்கல் 25 பந்துகளில் 29 ரன்கள் அடுத்து ஆட்டமிழந்தார். ரியான் பராக் மீண்டும் ஒருமுறை சோதப்பலாக விளையாடி 5 ரன்களுக்கு வெளியேறினார்.
55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிவரும் ராஜஸ்தான் அணிக்கு, கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வருகிறார். இவர் 50 ரன்களை நெருங்கி வருகிறார்.