உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம் !!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.

உலக கோப்பைக்காக அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் அந்த அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. நல்ல பலம் வாய்ந்த அணியாகவே இங்கிலாந்து அணி உள்ளது.

இந்நிலையில், உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மீது உற்சாக போதை மருந்து எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்து, அவர் மீதான புகார் உறுதிப்படுத்தவும் பட்டதால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அவர் நீக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

அலெக்ஸ் ஹேல்ஸிற்கு பதிலான மாற்று வீரர் மற்றும் உலகக்கோப்பைக்கான இறுதி அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த சில தினங்களில் அறிவிக்கும் என தெரிகிறது.

ராயல் லண்டன் போட்டிகளிலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக கூறி பாதியில் விலகியிருந்தார். ஆனால் போதை மருந்து எடுத்துக்கொண்டததற்காக அவருக்கு 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டதாகவும் அதனால் தான் அவர் அந்த தொடரிலிருந்து விலகியதாகவும் இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை நெருங்கியுள்ள நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மதுபான விடுதியில் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் 6 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது போதை மருந்து விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். அடிக்கடி பிரச்னைகளில் சிக்குவதால் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.