இந்த வீரர் தேர்வாளர்களுக்கு மிகப் பெரும் தலைவலியாக உள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் சேர்வாரன் m.s.k. பிரசாத் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை தேர்வாளர் மான எம்எஸ்கே பிரசாத் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணியின் இளம் வீரர் ஹனுமா விஹாரி குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.
ஹனுமா விஹாரி இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைக்காமல் சவுத் ஆப்பிரிக்கா A அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாட வைத்தது சரியான முடிவு கிடையாது என்று பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர், இந்த நிலையில் தற்பொழுது சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஹனுமா விஹாரி தேர்வாகியுள்ளார்.
ஹனுமா விஹாரி குறித்து எம்எஸ்கே பிரசாத் பேசியது
என்னைப் பொருத்தவரையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஹனுமா விஹாரி வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இந்திய அணி இரண்டாம் தர போட்டியான சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்தியா ஏ அணியில் விளையாட வைத்தது. அந்த போட்டியில் ஹனுமா விஹாரி மூன்று அரை சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக செயல்படுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது, ஆனால் ஹனுமா விஹாரி போன்ற ஒரு இளம் வீரர் வெளிநாட்டு மைதானங்களில் மிகச் சிறந்த முறையில் விளையாடி உள்ளார்.
ஹனுமா விஹாரி இந்திய அணி தேர்வாளர்களுக்கு மிகப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளார், அவரை புறக்கணித்து விட்டு வருகிற டெஸ்ட் தொடரில் பேட்டிங் ஆர்டரை செட் செய்ய முடியாது. மிகச்சிறந்த யுக்திகளை கையாளும் ஹனுமா விஹாரி அல்லது ஆக்ரோஷமாக செயல்படும் ஸ்ரேயாஸ் ஐயர் இரு வீரர்களையும் தற்பொழுது புறக்கணிக்க முடியாது. இதனால் இந்த இரு வீரர்களின் ஒருவருக்கு நிச்சயம் வருகிற டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று பிரசாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.