இதுக்கு மேல வேற என்ன வேணும்; கெத்தாக பேசும் முகமது ஷமி !!

இதுக்கு மேல வேற என்ன வேணும்; கெத்தாக பேசும் முகமது ஷமி

பொதுவாக இந்தியாவுக்கு வந்து ஆடும் அணிகள் குழிப்பிட்சில் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில்தான் சிக்கல்களை எதிர்கொண்டு களத்தில் மட்டையுடன் நடனம் புரிவது வழக்கம், ஆனால் இப்போதெல்லாம் இந்தியப் பிட்ச்களில் இந்திய வேகப்பந்து வீச்சுக்கு எதிரணி பேட்ஸ்மென்கள் மட்டையுடன் களத்தில் நடனமாடச் செய்துள்ளதாக மொகமது ஷமி பெருமிதமடைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒயிட்வாஷ் வெற்றியில் மொகமது ஷமி 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டு நாட்கள் களத்தில் நின்று அலுத்துச் சலித்துப் போன கால்கள் நடனமாடுவதில் வியப்பென்ன இருக்க முடியும்? பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் மைதானத்தில், களத்தில் எதிரணி வீரர்களை நோக்கி நட்பு ரீதியாக கலாய்ப்பது வழக்கம், ஆனால் போட்டி முடிந்தவுடன் டான்ஸ் ஆட வைத்தோம் என்றெல்லாம் எந்த ஒரு பவுலரும், அவர் எவ்வளவு ஆக்ரோஷமானவராக இருந்தாலும், சரி, பேசுவது வழக்கமல்ல.

ஷமி கூறியதாவது:

“இந்தியப் பிட்ச்கள் பொதுவாக ஸ்பின்னர்கள் சாதக பிட்ச்களே. ஆனால் இப்போது எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களிடமும் அந்தச் சக்தி உள்ளது, நாங்களும் பேட்ஸ்மென்களை மட்டையுடன் களத்தில் டான்ஸ் ஆட வைக்க முடியும்”.

முன்பெல்லாம் அயல்நாடுகளில் பின் வரிசை வீரர்கள் பவுலர்களின் வீச்சுக்கு டான்ஸ்தான் ஆடுவார்கள், ஆனால் இன்றைய நிலையில் பவுலர்களும் பேட் செய்கின்றனர். சமீப காலங்களில் நாங்களும் பேட் செய்வோம் என்பதை காட்டி வருகிறோம், அடிக்கவும் செய்கிறோம்” என்று ஷமி, உமேஷ் யாதவ்வின் 10 பந்து 31 ரகள் அதிரடி பற்றிக் குறிப்பிட்டார்.

உமேஷ் யாதவ் கூறுகையில், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பிடித்தேன். கேப்டன் எனக்கு ஆக்ரோஷமாக வீசுவதற்கான சுதந்திரத்தை அளித்தார். எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது” என்றார்.

Mohamed:

This website uses cookies.