வீடியோ; தமிழர்களுக்கு தமிழிலேயே தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங் !!

வீடியோ; தமிழர்களுக்கு தமிழிலேயே தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங்

ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் மக்களுக்கு தமிழிலேயே வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்தரை மாதத்தின் முதல் நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த புத்தாண்டு விளம்பி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இதனை தமிழ் மக்கள் கொண்டாடி வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வழக்கம் போல தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.

“தமிழா இது உன்னுடைய புத்தாண்டு

சோகங்கள்,துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும்

புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும்

உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்”

என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் எழுதியுள்ளார். மேலும், “வணக்கம் சென்னை! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தமிழர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு வருடங்கள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ளது. ரசிகர்களின் இரண்டு வருட எதிர்பார்ப்பையும், காத்திப்பையும் வீணாக்காத தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் த்ரில் வெற்றி பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. சென்னை அணி அடுத்ததாக இன்று இரவு நடைபெறும் போட்டியில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.