சுரேஷ் ரெய்னா போனால் என்ன? சென்னை அணியில் இணையும் மற்றுமொரு நட்சத்திர வீரர்! ரசிகர்கள் குஷி!


சுரேஷ் ரெய்னா போனால் என்ன? சென்னை அணியில் இணையும் மற்றுமொரு நட்சத்திர வீரர்! ரசிகர்கள் குஷி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய உள்ளார் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.

ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து ஐபிஎல் அணியில் விளையாடும் இந்திய வீரர்கள் பலர் ஏற்கனவே துபாய் மற்றும் அபுதாபி சென்றடைந்து, நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் முடிவடைந்து இரண்டாவது கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இது முடிந்து மும்பை பெங்களூரு ஆகிய அணி வீரர்கள் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு விட்டனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சிக்கு வரவில்லை.

சென்னை அணியில் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் பதிமூன்று பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இது முடிந்து, அவர்களுக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியானால் சென்னை அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்கிற பேச்சும் எழுந்துள்ளது.

இதற்கிடையில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருப்பது சென்னை அணிக்கு பெருத்த பின்னடைவை தந்திருக்கிறது. இப்படி தொடர்ந்து சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயங்களாக வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சென்னை அணியுடன் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இணைய இருப்பதாக வந்த தகவல் சற்று ஆறுதல் தருகிறது. இவர் சென்னையில் நடந்த 5 நாட்கள் பயிற்சி முகாமில் சொந்த காரணங்களுக்காக கலந்து கொள்ளவில்லை. தற்போது நேரடியாக துபாய் சென்று ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, பின்னர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

 

Prabhu Soundar:

This website uses cookies.