ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகியதற்கான உண்மை காரணம் இதுதான் என அவரது நண்பர் திடுக்கிடும் தகவலை தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மத்தியில் தொடர்ந்து சர்சையான செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. முதலாவதாக துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தனிமைப்படுத்துதல் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் பதிமூன்று பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது கண்டறியப்பட்டது. பிறகு இரண்டாம் கட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றும் தெரிந்துவிட்டது.
இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் சுரேஷ் ரெய்னா, திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இந்தியா வந்தார். இவர் இந்தியா வருவதற்கான காரணங்களாக பலவற்றைக் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பயிற்சியில் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் பங்கேற்றார். இதை முடித்துவிட்டு துபாய் செல்கையில், ஹர்பஜன் வரவில்லை. சொந்த காரணங்களுக்கான இந்தியாவிலேயே இருந்து விட்டார். ஒரு வாரம் களித்து துபாய் வருவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, திடீரென தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், “சொந்த காரணங்களுக்காக நான் ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை. எனக்கு கடினமான காலமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் தனித்து இருக்க விரும்புகிறேன். அதேநேரம் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட உள்ளேன். இந்த இக்கட்டான சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் எனக்கு மிகவும் ஆதரவாகவும் எனது விருப்பத்திற்கு ஏற்ப அவர்களும் நடந்துகொண்டனர். சிறந்த ஐபிஎல் ஆக இந்த ஐபிஎல் அவர்களுக்கு அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். நன்றி.” என பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் போனதற்கான காரணத்தை அவரது நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறுகையில், நிச்சயம் கொரோனா காரணமாக அவர் விலகவில்லை. மனைவி மற்றும் குழந்தைகளை இந்தியாவில் மூன்று மாதங்கள் தனியாக விட்டுச் செல்வது சாதாரண விஷயமல்ல. அதற்காக அவளுடன் இருக்க விரும்புகிறார். குடும்பத்தினரின் உடல் நலத்தை விட பணம் அவ்வளவு முக்கியம் இல்லை என எண்ணுகிறார்.” என குறிப்பிட்டு இருந்தார்.