உலககோப்பை அணியில் நவதீப் சைனிக்கு ஏன் இடம்கொடுக்கவில்லை என தேர்வாளர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.
பெங்களூரு அணிக்காக இந்த ஆண்டு ஆடி வரும் நவதீப் சைனி அற்புதமாக பந்துவீசி வருகிறார். உமேஷ் யாதவ் மற்றும் முஹம்மது சிராஜ் போன்றோர் மிகவும் மோசமாக சோதப்பும் நிலையிலும் இவர் அணிக்கு ஆறுதல் தரும் விதமாக பந்துவீசினார்.
கொல்கத்தா அணிக்கு எதிராகவும் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் கடைசி கட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்தி வெற்றி பெற செய்து இன்னும் பிளே ஆப் சுற்றுக்கான கனவை நிலைக்க செய்திருக்கிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 202 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி. பின்னர் பெங்களூரு பேட்டிங் செய்கையில் கே எல் ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி வந்தனர். கிட்டத்தட்ட போட்டியை இழந்துவிட்டதாக நினைத்த போட்டியை, முக்கியமான கட்டத்தில் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரையும் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி நம்பிக்கை தந்தார் நவதீப் சைனி.
அதே போல, கடைசி 18 பந்துகளில் 36 ரன்கள் தேவை இருக்க 19வது ஓவரில் நன்கு அடித்து ஆடி கொண்டிருந்த நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் நவதீப் சைனி. மறுமுனையில், பயங்கரமாக காணப்பட்ட டேவிட் மில்லர் விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார். அவர் 19வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமல்லாமல், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
இவர் உலகக்கோப்பை அணியில் வலைபயிர்ச்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் பந்துவீச்சை பாராட்டிய இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஏன் இவரை போன்ற வேகத்தில் அசத்தும் வீரர்களை உலகக்கோப்பை அணிக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.